தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புத்தளத்தில் வெள்ளம் – 15 குடும்பங்கள் பாதிப்பு

0 74

புத்தளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 15 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாராக்குடிவில்லு கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களை சேர்ந்த 20 பேரும், அங்குனவில கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆனமடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சங்கட்டிக்குளம் கிராமத்தில் 6 குடும்பங்களை சேர்ந்த 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை முந்தல் மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேச செயலகங்கள் முன்னெடுத்து வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.