தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கட்டணம் அதிகரிக்க நடவடிக்கை

0 85

கொழும்பில் உள்ள பிரதான பாடசாலையொன்று பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கட்டணமாக 3500 ரூபாவாக இருந்ததை 5000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில், கட்டண அதிகரிப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிடம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தொடர்பில் சில பாடசாலைகளின் அதிபரிகள் தெரிவித்துள்ளமையானது,

தவணைப் பரீட்சை கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை உள்ளடக்கியமையினால் புத்தாண்டில் பாடசாலை அபிவிருத்திக் கட்டணங்கள் சுமார் ஐம்பது வீதத்தால் அதிகரிக்கப்படுமென பாடசாலை அதிபர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

மாகாண சபைகள் தவணைப் பத்திரங்களுக்கு பணம் செலவழிப்பது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் பெற்றோர்களிடம் இருந்து பணம் அறவிடப்படும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், மின்கட்டண உயர்வால் பாடசாலைகளுக்கு வரம்பற்ற தொகையை பெற்றோர்கள் மீது சுமத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகின்றனர்.

இதுதவிர, அதிகரித்து வரும் எரிபொருள் உள்ளிட்ட செலவுகளுக்கு ஏற்ப, விளையாட்டு மற்றும் பிற பாடத்திட்டங்களுக்கு கணிசமான அளவு கூடுதல் பணம் செலவழிக்க நேரிடுகிறது என்று கூறும் பாடசாலை தலைமையாசிரியர்கள், இந்த செலவுகள் அனைத்தும் பாடசாலை மேம்பாட்டு சங்க கட்டணத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் சேவைக் கட்டணத்தை அதிகரிக்காமல் பாடசாலைகளில் பாதுகாப்பைப் பேண முடியாது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.