தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீனாவில் சாவோலோ சூறாவளி

0 74

சீனாவின் நிர்வாக ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஹாங்காங் அமைந்துள்ளது. 

ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி இன்று (02) காலை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சூறாவளியானது, தொடர்ந்து மத்திய குவாங்டாங் அருகே மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல கூடும் என சீன தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனால் மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் சூழலும் காணப்படுகிறது.

இதனால், முன்னெச்சரிக்கையாக 8 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

நேற்று மதியம் முதல் இன்று காலை 10 மணி வரை 460 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், விமான நிலையங்களில், ஹாங்காங் நகரில் இருந்து வேறு இடங்களுக்கு புறப்பட்டு செல்ல இருந்த பயணிகள் மற்றும் ஹாங்காங் நோக்கி வரவிருந்த பயணிகளை வரவேற்க காத்திருந்த பயணிகள் பரிதவித்தனர்.

ஹாங்காங்கில் பாடசாலைகள் திறப்பும் அடுத்த வாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. பங்கு சந்தைகளின் வர்த்தகமும் தற்காலிக இரத்து செய்யப்பட்டது. 

சூறாவளி எதிரொலியாக, ரயில் போக்குவரத்து சேவையும் அந்த பகுதியில் தற்காலிக இரத்து செய்யப்பட்டுள்ளது. 

இன்று மாலை வரை இந்த மாகாணத்தில் ரயில்கள் வருவதற்கோ அல்லது ரயில்கள் புறப்பட்டு செல்வதற்கோ அனுமதிக்கப்படாது. 

இதனால், கடலோர பகுதிகளில் தீவிர வெள்ள பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இன்று மெல்ல சூறாவளி பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகமும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.