தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய வானிலை அறிக்கை

0 76

நாட்டில் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (26) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும். மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.