தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிதிலி’ புயல்

0 81

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமைக்குள் (நவ. 17) புயலாக வலுப்பெறும். இதன் காரணமாகவும், இலங்கை அருகே நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாலும் தமிழகத்தில் 6 நாள்களுக்கு (நவ.17-22) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிலையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை (நவ. 16) காலை 5.30 மணியளவில் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமாா் 420 கி.மீ. கிழக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு – வடகிழக்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை (நவ. 17) புயலாக வலுப்பெற்று சனிக்கிழமை (நவ. 18) அதிகாலை வங்கதேச கடற்கரையையொட்டி நகா்ந்து மோங்லா-கேப்புபாராவு பகுதிகளுக்கு இடையே கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு ‘மிதிலி’ என்று பெயா் சூட்டப்படும். இந்தப் பெயரை மாலைதீவு பரிந்துரைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.