தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்

0 118

நமது பிரபஞ்சத்தில் நாம் பிறந்த தினம் தவிர்த்து பண்டிகைகள் மற்றும் விசேட நாட்கள் என ஆண்டின் 365 நாட்களில் 10 முதல் 15 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. 

கொண்டாட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது கிடையாது, என்ற போதிலும் உலகளவில் சிறப்பு தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருவது இயற்கையாகி விட்டது.

நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும், நமது கவலைகளில் இருந்து ஒருசில நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளும் வகையிலும், பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில், ஆண்டின் 365 நாட்களிலும் ஏதேனும் ஒரு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை நம்மில் பலரும் அறிந்து இருப்போம்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 08 ஆம் திகதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அக்டோபர் 26 ஆம் திகதி 1966-ம் ஆண்டு யுனெஸ்கோவின் 14-வது பொதுக்குழு கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 08 ஆம் திகதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், எழுத்தறிவை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவது உள்ளிட்டவை சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுவதின் நோக்கம் ஆகும். 

Leave A Reply

Your email address will not be published.