தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அனுராதபுரத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு

0 94

அனுராதபுரம் கும்பிச்சங்குளம் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அனுராதபுரம் மாநகர சபை இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

ஏரியில் உள்ள தெப்பிலி பவளப்பாறை, திலாப்பியா மீன்கள், இறால், போன்றவை இவ்வாறு உயிரிழந்து காணப்பட்டன.

இதற்கிடையில், சிலர் தண்ணீரில் மிதக்கும் மீன்களை பிடித்து உண்பதற்கு கொண்டு செல்வது தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்து காணப்படும் மீன்களை சிலர் அநுராதபுரம் நகரின் சில ஏரிகள் மற்றும் மல்வத்துஓயாவில் விடுவதால், அந்தந்த நீர்த்தேக்கங்களில் உள்ள மீன்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அநுராதபுர மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அநுராதபுரம் மாநகர ஆணையாளர் ருவன் விஜேசிங்க,

​​கும்பிச்சாங்குளம் ஏரியில் பாசிகள் வளர்ந்து மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு வடமத்திய மாகாண நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீன்களின் உயிரிழப்புக்கான காரணத்தை ஆராய்வதற்காக, கும்பிச்சாங்குளம் ஏரியின் சில நீர் மாதிரிகள் அனுராதபுரம் மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ருவன் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.