தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்

0 75

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பஸ் ஒன்றுவிழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காயமடைந்த 7 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும் 11 பேர் நாரம்மல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் 51 வயதான நபரே உயிரிழந்ததுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.