தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விமான தளத்தை விட்டு கடல் நீரில் இறங்கிய விமானம்

0 82

அமெரிக்காவின் ஹவாய் மாநிலம், ஓஹு தீவின் கெனோஹே கடற்கரை பகுதியில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமான தளத்தில் விமானமொன்று கட்டுப்பாட்டை இழந்து கடல்நீரில் இறங்கியுள்ளது.

வாஷிங்டன் மாநிலம் விட்பி தீவில் இருந்து 9 பயணிகளுடன் போயிங் போஸிடான் 8-ஏ ரக அமெரிக்க கண்காணிப்பு விமானம், விமான தளத்தில் தரையிறங்க முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையை தாண்டி வேகமாக சென்று கடல்நீரில் இறங்கியுள்ளது.

பயணிகள் அனைவரும் காயங்கள் ஏதுமின்றி கடலில் நீந்தி கரை சேர்ந்துள்ள நிலையில், கருமேகங்கள் மற்றும் மழையினால் ஓடுபாதை விமானிக்கு தெளிவாக தெரியவில்லை என்றும் இதனால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் இருந்து எரிபொருள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் ஏதும் கடல் நீரில் கலந்து விடாமல் தடுக்கும் வகையில் கடல் நீரில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave A Reply

Your email address will not be published.