தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விமானமும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

0 78

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிரங்க முயற்சித்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த நபர் காயமடைந்தார்.

விபத்தில் சிறு காயம் அடைந்த விமானி மற்றும் கார் ஓட்டுன்ரை மீட்ட தீயனைப்பு துறையினர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இந்த விபத்தின் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அந்த விமானம் வேகமாக தரையிறங்க முயற்சித்தது, ஆனால விமானத்தை அவ்வளவு எளிதாக தரையிறக்க முடியாது என்பதை நான் உணர்ந்தேன்” என்கிறார் மற்றொரு விமானி .

மிட்லேண்டில் இருந்து வந்த அந்த சிறிய ரக விமானம், ஏரோ கன்ட்ரி விமான நிலையத்தில் அவசரமாக தரையிரங்க முயற்சித்த போது இந்த விபத்து நடைபெற்றதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விமான விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மெற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.