தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட 15 மாத பெண் குழந்தை மரணம்

0 102

வங்கதேசத்தை சேர்ந்த 15 மாத பெண் குழந்தைக்கு பறக்கும் விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்தியாவின் பெங்களூர் – புது டெல்லி இடையிலான விமானத்தில் குறித்த குழந்தை பெற்றோருடன் பயணித்தது.

அப்போது நடுவானில் குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அங்குள்ள மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூன்று நாட்களுக்கு பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது.

சிறுநீரக மற்றும் இதய செயலிழப்பு உட்பட பல சிக்கல்களால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலத்தை வங்கதேசத்திற்கு அனுப்புவதற்கான முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் இறங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.