தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வவுனியா வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞரும் மரணம்

0 98

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தரான இளைஞன் ஒருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த குழுவொன்று வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன் குறித்த வீட்டை பெற்றோல் ஊற்றி எரியூட்டியிருந்தனர்.

இச்சம்பவத்தின் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு மாத கர்ப்பிணியான 21 வயதான பாத்திமா என்ற இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருந்ததுடன், 10 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதில், மரணமடைந்த பெண்ணின் கணவன் பலத்த தீக் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உறவினர்களின் வேண்டுதலின் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் இருந்து திங்கள் கிழமை மாலை யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு அவர் மாற்றப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் மணமடைந்துள்ளார். அவரது உடலை வவுனியாவிற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை அவரது உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ தினத்தன்று மரணித்த இளம் குடும்ப பெண்ணின் கணவரான வவுனியா, உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ச.சுகந்தன் என்பரே மரணமடைந்துள்ளார். இச் சம்பவங்கள் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைனகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Leave A Reply

Your email address will not be published.