தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வலசையில் உள்ள ஹோட்டல்கள் இடமாற்றம்

0 99

யானை வழித்தடங்களுக்கு அருகில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய நிர்மாணங்களை இடமாற்றம் செய்ய பாராளுமன்ற சுற்றுசூழல் குழுவின் அறிக்கை முன்மொழியப்பட்டுள்ள நிலையில், வனஜீவராசிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று விவாதம் ஒன்றை முன்மொழிந்தார்.

“நான் தாக்கல் செய்யும் அறிக்கையில், யானை வழித்தடங்களுக்கு அருகில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பிற கட்டுமானங்களை இடமாற்றம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் இதர கட்டுமானங்களில் இருந்து கட்டணம் வசூலிக்கவும் நாங்கள் முன்மொழிந்துள்ளோம்” என்று குழுவின் தலைவர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி வரையில் யானைகள் மனித மோதலினால் சுமார் 367 யானைகள் மற்றும் 167 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையை மேற்கோள்காட்டி எம்பி மன்னப்பெரும தெரிவித்தார். 

யானைகள் பெரும்பாலும் தோட்டங்கள் மற்றும் வீடுகளில் உள்ள பயிர் சேமிப்புக் கிடங்குகளை நாசம் செய்வதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது. யானை நடமாட்டத்தை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில மின்வேலிகள் காடுகளுக்கு நடுவே இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வன்னியாராச்சி, காடுகளுக்கு மத்தியில் இதுவரை மின்சார வேலிகள் அமைக்கப்படவில்லை. மேலும் மின்வேலி அமைக்கும் பணியை தனியாருக்கு வழங்கவில்லை என்றும் மறுத்தார். 

“மின்வேலி அமைக்கும் போது மரங்களை வெட்ட வேண்டும். மனித யானை மோதல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்,” என்று அவர் கூறினார்

Leave A Reply

Your email address will not be published.