தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வர்த்தக நிலையத்தில் 300,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டு

0 71

நல்லதண்ணி நகருக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் புதன்கிழமை (01) திகதி இடம்பெற்றுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மழை பெய்து வந்த வேலையில் இவ்வாறு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இருந்து தடையவியல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் மூன்று மணித்தியாலங்கள் கை ரேகை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

இது குறித்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நல்லத்தண்ணி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.