தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வடமேல் மாகாண மக்களுக்கு காட்டு யானை சேத இழப்பீடு இரண்டரை மில்லியன் ரூபா

0 75

காட்டு யானைகளினால் கடந்த 8 மாதங்களில் வடமேல் மாகாண மக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக இரண்டரை மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் குருநாகல் மாவட்டத்தில் காட்டு யானைகள் தாக்குதல்களால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மாவட்டத்தில் காட்டு யானைகளினால் ஏற்பட்ட சொத்து சேதம் உட்பட நட்டஈடாக வழங்கப்பட்ட தொகை 73 இலட்சத்து 19,178 ரூபாவாகும்.

கடந்த எட்டு மாதங்களில் புத்தளம் மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சொத்து சேதம் மற்றும் மனித உயிர்களுக்கு இழப்பீடாக 87 லட்சத்து 93,095 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற வனவிலங்கு பிரச்சினைகள் மற்றும் நிலையான தீர்வுகள் தொடர்பிலான கலந்துரையாடலின் போது, ​​வடமேல் மாகாணத்தில் காட்டு யானைகள் சேதப்படுத்தியதற்காக 61 இலட்சத்து 12,273 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.