தமிழ் ஓசை
தமிழ் ஓசை

லிபியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 81

லிபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஆக உயரக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கு அடியில் மற்றும் வெள்ளத்தில் ஏராளமான உடல்கள் சிக்கியிருப்பதாலும், உயிர் பிழைத்தவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, உயிரிழந்த சடலங்களை நீர் விநியோக நிலையங்களுக்கு அருகில் வைக்கக்கூடாது எனவும், கூடிய விரைவில் புதைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள், பொருட்கள் மற்றும் பயிற்சி ஆகியவற்றுடன் உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவ லிபியாவில் உள்ள குழுக்கள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாரிய வெள்ளம் காரணமாக குறைந்தது 35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.