தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழ் நல்லூர் வீரமாகாளி ஆலயத்தில் உடைக்கப்பட்ட உண்டியல்

0 81

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் வீரமாகாளி ஆலயத்தில் நேற்றையதினம் (30) உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வசந்த மண்டபத்தில் இருந்த ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளது.

குறித்த திருட்டுச் சம்பவத்துடன் ஆலயத்தில் நெருங்கிச் செயற்பட்டவர் சம்பந்தப்பட்டமை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆலய குருக்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.