தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மோட்டார் சைக்கிள் விபத்து இருவர் மரணம்

0 77

இன்று (21) அனுராதபுரம் – விலாச்சி வீதியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 36 வயதுடைய பெண்ணும் அவரது 9 வயது மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.