தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மூளைக்குள் உயிருடன் இருந்த 8cm நீளம் உள்ள ஒட்டுண்ணி புழு

0 90

அவுஸ்திரேலிய பெண்ணின் மூளைக்குள் உயிருடன் இருந்த 8 சென்டி மீட்டர் நீளம் உள்ள ஒட்டுண்ணி புழுவை மருத்துவர்கள் அகற்றி உள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயது பெண்மணி நிமோனியா, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்காக சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனை சென்றுள்ளார். மூன்று மாதங்கள் தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்தும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஞாபக மறதியும் மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. 

இதனால், அவரின் தலையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்ததுள்ளனர். ஸ்கேன் ரிப்போர்டை பார்த்த மருத்துவர்கள் அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது, அவரின் மூளையில் 8 செ.மீ நீளம் உள்ள ஒட்டுண்ணி புழு உயிருடன் இருந்துள்ளது. 

அது ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற இனத்தைச் சேர்ந்த உருண்டைப் புழுவாகும். அவை ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினி போன்ற பிரதேசங்களில் வாழக்கூடியவை மலைப்பாம்புகளின் வயிற்றுக்குள் மட்டுமே இந்த வகையான புழு உள்ளது என்கிறனர். 

மனித மூளைக்குள் பாம்புகளின் ஒட்டுண்ணி கண்டறியப்படுவது இதுவே முதல்தடவை என்கிறனர் மருத்துவர்கள். அந்த பெண்ணின் மூளைக்குள் அந்த ஒட்டுண்ணி புழு எப்படி வந்திருக்கும் என மருத்துவர்கள் ஆய்வு செய்ததில், அதன் பெண் சாப்பிட்ட உணவில் எதிலாவது, புழுவின் முட்டை இருந்திருக்கலாம். அதையும் அந்தப் பெண் சேர்த்து அவர் சாப்பிட்டிருக்கக்கூடும். அதுதான் இந்த பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என்கிறனர் மருத்துவர்கள். 

Leave A Reply

Your email address will not be published.