தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மூன்றாவது மாடியில் இருந்து  விழுந்து சிறுவன்

0 95

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து  விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  

இந்த விபத்து நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை மகசின் வீதியில் வசிக்கும் 16 வயது சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சிறுவன் வீட்டில் இல்லாததை அறிந்து சிறுவனின் தாய் அவரைக் தேடியுள்ளார்.

பின்னர், குறித்த சிறுவன் அடிக்கடி செல்லும் இடமான அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டிற்கு சென்று அழைத்த போது வீட்டுக்குள் இருந்த சிறுவன் தாய்க்கு தெரியாமல் பின் ஜன்னல் வழியாக கீழே இறங்க முற்பட்டுள்ளார்.

அப்போது, ​​அவர் விபத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுவன் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாயின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், வீட்டின் பின்புறம் ஓடிச் சென்று சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிமென்ட் கிரில் மீது ஏறி தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.