தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி

0 82

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தொடர் மின்சார விநியோகத்திற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (02) அறிவித்தது.

இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கடந்த மாதம் 21 ஆம் திகதி முன்வைத்துள்ள யோசனையில், மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

மின்சார கட்டணத்தை 15 வீதத்தால் குறைப்பதற்கான தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டு 20 நாட்கள் மாத்திரம் கடந்துள்ள நிலையில் மீண்டும் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.