தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மீண்டும் காலி சிறைச்சாலை கைதிகளை பார்வையிட அனுமதி

0 110

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

கைதிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் பரவி வருவதால், கடந்த சில நாட்களாக கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பார்வையிடுவதற்கான வாய்ப்பை சிறைச்சாலை திணைக்களம் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நோய் பரவல் அதிகமாகும் பட்சத்தில் கைதிகளை இனி வெளியே அழைத்துச்செல்ல மாட்டோம் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்திருந்தனர்.

இதன் காரணமாக, சிறையில் பலர் பாதிக்கப்பட்டிருந்ததுடன் 09 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 4 பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.