தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மருந்தகத்தை உடைத்து கொள்ளை

0 75

கந்தளாய் பகுதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றினை இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்திருட்டுச் சம்பவம் கந்தளாய் பேராறு பகுதியில் செவ்வாய்க்கிழமை (31)  இடம்பெற்றுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களின் பெருமதி ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் அதிகம் என கந்தளாய் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபர்களால் மருந்தகத்தில் உள்ள சி.சி.ரி.வி கேமராக்களின் சேமிப்பு கருவியையும் உடைத்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்  கந்தளாய்  பிரதேசத்தில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால்,  இரவு நேரங்களில் நடமாடும் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமென, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.