தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு காதலனை திருமணம் செய்து கொண்ட 10 வயது சிறுமி

0 97

அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி தான் இறப்பதற்கு முன்னர் காதலனை கரம் பிடித்துள்ளார்.

Emma Edwards என்ற 10 வயது சிறுமி lymphoblastic leukaemia எனப்படும் இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோயால் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பாதிக்கப்பட்டார்.

நோய் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் Emma-வை காப்பாற்ற முடியாது என கடந்த ஜூன் மாதம் மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் கூறினர். சில வாரங்களில் அவரின் உயிர் பிரிந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

mma இன்னும் சில வாரங்களுக்கு பிறகு எல்லாரையும் விட்டு பிரிந்து விடுவாள் என்பதை உணர்ந்த அவரின் தாய் அலீனா, “டிஜே” என்ற சிறுவனின் தாயுடன் பேசி இருவருக்கும் மாதிரி திருமணம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். மிகவும் இளம் வயதாக இருக்கும் போதிலிருந்தே, Emmaவும், டிஜேவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.

இதனை தொடர்ந்து 100 விருந்தினர்கள் வரை அழைக்கப்பட்டு தோட்டத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிறுமி Emma-வை டிஜே திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த 12 நாட்களில் Emma உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.