தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பேலியகொட மெனிங் சந்தை ஆர்ப்பாட்டத்தில் 12 பேர் கைது

0 100

இன்று (26) காலை நீதிமன்ற உத்தரவை மீறி பேலியகொட மெனிங் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரில் 12 பேர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரி கூறினார்.

மெனிங் சந்தையில் கடைகளை விநியோகிப்பதில் முறைகேடு நடந்ததாகக் கூறி சந்தையில் சிலர் சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், போராட்டத்துக்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.