தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பெரஹராவில் யானைகளால் பதற்றம்

0 77

கண்டி கும்பல் பெரஹெரவின் இரண்டாவது நாள் நிகழ்வின் போது விஷ்ணு கோவிலுக்கு சொந்தமான இரண்டு யானைகள் குழப்பமடைந்து செய்த அட்டகாசத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த இரண்டு யானைகளும் குழப்பமடைந்ததையடுத்து சம்பவ இடத்தில் அமைதியாக இருந்த தலதா மாளிகைக்கு சொந்தமான மேலும் 2 யானைகளும் தமது கட்டுப்பாட்டையிழந்து அட்டூழியம் செய்யத் தொடங்கின.

சம்பவத்தையடுத்து கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட தலதா மாளிகையின் யானைகள் இரண்டும் மீண்டும் ஊர்வலம் சென்றதுடன், மற்ற இரு யானைகளும் குயின்ஸ் ஹோட்டல் அருகே கட்டப்பட்டிருந்தன.

சம்பவத்தின் போது காயமடைந்த பெண் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் யானைகளின் அட்டகாசத்தால் பீதியடைந்து குளத்தில் (நுவர வேவ) வீழ்ந்த மூவரை பொலிஸ் உயிர்காப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.