தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பூங்காவில் யானை மீது துப்பாக்கிச் சூடு

0 69

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித் திரியும் ஒற்றை யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளது. 

யானை தொடர்பில் கல்கிரியாகம வனவிலங்கு தள பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், வடமேற்கு வனவிலங்கு வலயத்தின் நிகவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்தியர் இசுரு ஹேவகோட்டகே தலைமையிலான பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று யானைக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 யானையின் முன் இடது காலின் கீழ்ப் பகுதியில் பல துப்பாக்கிச் சூட்டு தடயங்கள் காணப்படுவதுடன், இது துப்பாக்கியால் சுடப்பட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் ஊகிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.