தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புதிய சாதனை படைத்த முட்டை விற்பனை

0 113

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் சாதனை விற்பனையை எட்டியுள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

குறைந்தது மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்த்து நாங்கள் கையிருப்புக்களை விநியோகித்தோம், ஆனால் முட்டைகள் பெரும்பாலும் எங்கள் விற்பனையகங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிய முடிகின்றது.

438,000 முட்டைகளில், 420,000 முட்டைகள் நேற்று விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்றும் அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். மேல்மாகாணத்தில் இருப்புக்களை நிரப்பவும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் இன்று முதல் முட்டைகள் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.