தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புதிய களனி பாலத்திற்கு அருகில் சடலம் மீட்பு

0 528

புதிய களனி பாலத்திற்கு அருகில் உள்ள சேதவத்தை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதில் சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 14 மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த 18 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் உயிரிழந்தவரின் கையடக்கத் தொலைபேசியை கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.