தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பிறந்த சிசுவை கால்வாயில் வீசிய பெற்றோர்!

0 92

முல்லேரியா – கௌனிமுல்ல பகுதியில் பிறந்த சிசுவை வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் வீசிய தாயும் அவரது கணவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இந்த சிசு பிறந்துள்ள நிலையில், அருகில் உள்ள கால்வாய் ஓரத்தில் வீசி சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அப்பகுதி வாழ் மக்கள், புதைகுழியில் எதார்ச்சையாக பலியான சிசுவின் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்தே குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது

குறித்த பெண், முல்லேரியா, பண்டார மாவத்தையில் தனது கணவர் வீட்டில் சிசுவை பிறசவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் பொரளை – வனாத்தமுல்ல, சஹஸ்புர பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய பெண் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பெண்ணும் அவரது கணவரும் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும், இதனால் பிரசவித்து சிசுவை தூக்கி எறிந்து இருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணையும் அவரது கணவரையும் முல்லேரிய பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.