தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பல்கேரியா நாட்டில் பெண்களை விற்பனை செய்யும் “மணமகள் சந்தை”

0 93

ஆடைகள், உணவுகள், செல்லப்பிராணிகள், மீன்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் சந்தைகளை நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்வி பட்டிருப்போம்.

ஆனால் பெண்களை விற்பனை செய்யும் சந்தை பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம்..! பல்கேரியா நாட்டில் தான் அந்த மணமகள் சந்தை உள்ளது. இந்த சந்தையானது அந்நாட்டு அரசின் அனுமதி பெற்று நடக்கிறது என்பது கூடுதல் தகவல்.

அனைத்து பெண்களுக்கும் இன்றி நாட்டில் உள்ள ஏழை பெண்களுக்காக மட்டுமே இந்த மணமகள் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள், தங்களின் மகள்களை இந்த சந்தைக்கு அழைத்து செல்கின்றனர்.

அங்கு ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்களை தகுந்த விலை கொடுத்து வாங்கி மனைவியாக ஏற்று வாழத் தொடங்குகின்றனர். சந்தையில் விற்கப்படும் மணமகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பல நிபந்தனைகள் வைக்கப்படுகின்றன.

ஆண்டுக்கு மணமகள் சந்தை நான்கு முறை நடைபெறுகிறது. கலைட்ஜி சமூகத்தினர் இந்த சந்தையில் மணமகளை விற்கின்றனர். இந்த சமூகத்தினர் பாரம்பரியமாக செப்பு வேலை செய்பவர்கள் ஆவர்.

Leave A Reply

Your email address will not be published.