தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பதில் அமைச்சர்கள் நியமனம்

0 110

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) இந்தியா செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப்பகுதியில், அவரின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதில் நிதி மற்றும் பொருளாதர நிலைப்படுத்தல், தேசிய கொள்கைகள் அமைச்சராகவும், ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பதில் ஏற்றுமதி ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பதில் இராஜாங்க அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் பதில் மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

Leave A Reply

Your email address will not be published.