தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் கிடையாது

0 62

நாடு முழுவதும் தடையின்றி மின்சார விநியோகம் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் கிடையாது என அவர் கூறியுள்ளார்.

24 மணிநேரமும் தொடர்ச்சியாக தடையின்றி மின்சார விநியோகத்தை வழங்குவதற்கான மேலதிக மின்சாரம், இலங்கை மின்சார சபை வசம் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சமனல வெவ நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்படுகின்றமையினால், ஒகஸ்ட் மாதம் 16ம் திகதியுடன் சமனலவெவ நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக தடைப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையிலிருந்து விடுப்படுவதற்கு மின்சாரம் கொள்வனவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.