தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

0 94

மாதாந்த ஏற்றுமதி வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்கன் டொலரை விட அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் மொத்தமாக 5.9 பில்லியன் அமெரிக்கன் டொலராக காணப்படுவதாகவும் அந்த வகையில் கடந்த மே மாதத்தில் ஏற்றுமதி வருமானம் ஒரு பில்லியனாக காணப்பட்டதுடன் ஜூன் மாதத்திலும் அதே போன்று ஏற்றுமதி வருமானம் ஒரு பில்லியன்அமெரிக்கன் டொலர்களை விட அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதை வேளை கடந்த ஜூன்மாதம் சுற்றுலாத்துறை மூலமானவருமானம் 123 மில்லியன் டொலராக இருந்துள்ளதுடன் இது கடந்த வருடத்து டன் ஒப்பிடும்போது 173 வீத அதிகரிப்பைகாட்டுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த ஆண்டின் முதல்ஆறு மாத காலத்தில் 2,823 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் மூலமாக நாட்டுக்குகிடைத்துள்ளதாகவும் மத்திய வங்கியின்அறிக்கை தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.