தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாக்பூரில் இருந்து புனேவுக்கு விமானம் கிளம்ப தயாரான போது உயிரிழந்த விமானி.

0 87

இந்தியாவின் நாக்பூரில் இருந்து புனேவுக்கு விமானம் ஒன்று புறப்பட இருந்தது.

தமிழகத்தை சேர்ந்த மனோஜ் சுப்ரமண்யம் என்ற விமானி குறித்த இண்டிகோ விமானத்தை இயக்குவதற்கு தயாராக இருந்தார்.

அதன்படி விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதியில் விமானி காத்திருந்தார்.

அப்போது திடீரென மாரடைப்பு எற்பட்டு கீழே சரிந்து விழுந்து மனோஜ் உயிரிழந்தார்.

பயணிகளில் இருந்த ஒரு இதய நோய் மருத்துவர், மனோஜை பரிசோதித்த போது அவரின் மூச்சு நின்றது தெரியவந்தது.

அவரை மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்து சென்ற போது ஏற்கனவே உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் காரணமாக குறித்த விமானம் வேறு விமானியுடன் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Leave A Reply

Your email address will not be published.