தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தார் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து – ஒருவர் மரணம்

0 57

நேற்று (23) பிற்பகல் கலேவெல நகரில் தார் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மகள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் சிகிச்சைக்காக தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 உயிரிழந்துள்ள இளம்பெண், சிறிபுர பகுதியைச் சேர்ந்த எஸ். எச். லோச்சனா காவ்யாஞ்சலி எனவும் இன்று (24) அவரது 20ஆவது பிறந்தநாள் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தெஹியத்தகண்டிய சிறிபுர பிரதேசத்தில் இருந்து குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கலேவெல நகரின் பிரதான வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பின்னால் வந்த தார் ஏற்றிச் சென்ற வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், விபத்து தொடர்பில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியின் சாரதி மற்றும் தார் ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.