தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தாமரைக் கோபுரத்தை சேதப்படுத்தியவர்களுக்கு தகுந்த தண்டனை

0 90

பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள்  விடுக்கப்பட்டிருந்த போதிலும்  தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்புப் பிரிவில் சேதங்களை ஏற்படுத்திய இளைஞர்கள் குழுவொன்று இனங்காணப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுர நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தை நிர்வாகக் குழுவினர் மருதானை பொலிஸாருக்கு அறியப்படுத்தி சேதம் விளைவித்த குழுவினரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் பொதுமக்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிப்பதாக தாமரைக் கோபுரத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

”பொதுச் சொத்தைப் பாதுகாப்பது எம் அனைவரது கடமையாகும். இருந்தபோதும் தாமரைக் கோபுர சுவர்கள் மற்றம் இரும்பு வேலிகளை சேதப்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்கின்றது” என நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.