தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தாமரைக் கோபுரத்தின் காட்சி மையத்தில் மாற்றம்

0 75

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் காட்சி மையத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோபுரத்தின் பார்வை மைய பகுதியிலிருந்து காணக்கூடிய கொழும்பின் புகழ்பெற்ற இடங்கள் பற்றிய விழிப்புணர்வு பலகைகளை காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ‘லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி பிரைவேட் லிமிடெட்,’ இது பற்றிய தகவல்களைக் கொண்ட ஒரு குறிப்பைச் சேர்த்துள்ளது.

தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு அறையின் சுவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டதுடன், அவற்றை மீளமைப்பதற்கு பாரிய செலவினம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இந்நிலையில், இந்த புதிய திட்டத்தின் கீழ், சுவர்கள் சேதமடையாத வகையில் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதன்படி, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு அறையில் அடையாளம் காணப்பட்ட சவால்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த வேலைத்திட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தாமரை கோபுரம் ஒரு புதிய கல்விப் பார்வை இடமாக உள்ள தகவல்களும் இங்கே காட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.