Developed by - Tamilosai
புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் ஒரு அடி உயரம் வரை திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் கே. சுப்ரமணியம் தெரிவித்தார்.
அத்தோடு ஒரு செக்கனுக்கு 880 கன அடி நீர் வெளியேறுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். குறித்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் நீர்த்தேக்கத்தை அன்டிய தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்களை மிக அவதானமாக செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.
