தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி கொண்ட மாணவி

0 126

யாழ், பாசையூரை சேர்ந்த லிசியஸ் மேரி சானுயா (19) என்ற மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் சகோதரியின் ஆடையொன்றை உயிரிழந்த மாணவி அணிந்துள்ளார். இதை குடும்பத்தினர் கண்டித்ததால் கோபமடைந்த மாணவி, கடந்த 12ஆம் திகதி தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார்.

படுகாயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த16ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.