தமிழ் ஓசை
தமிழ் ஓசை

 சில மாதங்களில் முழுமையாக அவசர மருந்து கொள்வனவை நிறுத்த நடவடிக்கை

0 98

அவசர மருந்து கொள்வனவை எதிர்வரும் சில மாதங்களில் முழுமையாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரவித்தாா்.  கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டாா். 

நாட்டிலுள்ள மருந்து தேவைப்பாட்டை நிவர்த்தி செய்துகொள்ளும் நோக்கத்தில் மாத்திரம் அவசர மருந்து கொள்வனவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டாா். 

ஔடத ஒழுங்குப்படுத்துதல் அதிகாரசபையில் இருக்கம் குறைப்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்குள் இடம்பெறும் பிரச்சினைகள் முழுமையான நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினாா்.

Leave A Reply

Your email address will not be published.