தமிழ் ஓசை
தமிழ் ஓசை

‘சிம்பா’ என்ற சிங்கக்குட்டியை பொதுமக்கள் பார்வையிடலாம்

0 105

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் புதிதாக இணைந்துள்ள பிறந்து 5 வாரங்களான ‘சிம்பா’ என்ற சிங்கக்குட்டியை பொதுமக்கள் இப்போது பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் காலை 9.30 முதல் 10.30 வரையும் மதியம் 1.30 முதல் 3.30 வரையும் சிம்பாவை பிரதான உணவகத்தின் முன் பொதுமக்கள் காண முடியுமென தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் கலாநிதி திலக்  ப்ரேமகாந்த தெரிவித்துள்ளார்.  

ஹம்பாந்தோட்டை சபாரி பூங்காவில் சண்டி மற்றும் மீராவுக்கு பிறந்த சிம்பா, பிரசவத்தின் பின் தாயால் நிராகிக்கப்பட்டது. அதன் பின்னர் தெஹிவளை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட சிம்பா கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.