தமிழ் ஓசை
தமிழ் ஓசை

திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடி வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

0 75

நேற்று வெள்ளிக்கிழமை (23) திருகோணமலை பஸ் நிலையத்திற்கு அருகில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சோதனையின் போது 10 ஜெலிக்நைட் குச்சிகள் மற்றும் 15 டெட்டனேட்டர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக குறித்த வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் மற்றும் பொலிஸாரினால் சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மீன்பிடிக்க வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதால் கடல் உயிரினங்கள் மற்றும் கடல்சார் சூழல் என்பன பாதிக்கப்படுகின்றமையால் இலங்கை கடற்படையினர் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.