Developed by - Tamilosai
இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் இன்று (14) வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
முன்னதாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஆறு பாடசாலை தவணைகள் ஒதுக்கப்பட்டன.
எவ்வாறாயினும், இந்த வருடம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் 343 நாட்களில் ஏழு பாடசாலை தவணைகளை கடந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
