தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொழும்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

0 70

5 அம்சங்களின் அடிப்படையில் இன்று (1) கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது

கணிசமான எண்ணிக்கையிலான மின்சார ஊழியர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பு வந்ததாக என இலங்கை மின்சார ஊழியர் சங்கம்   தெரிவித்துள்ளது.

போராட்டம் காரணமாக கொம்பனி வீதியில் இருந்து கோட்டை நோக்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையை 14 நிறுவனங்களுக்கு விற்பனை செய்தமை, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் மின்கட்டண அதிகரிப்பு, சம்பள முரண்பாடுகளை நீக்காமை, உரிய பதவி உயர்வு வழங்காமை, ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.  

Leave A Reply

Your email address will not be published.