தமிழ் ஓசை
தமிழ் ஓசை

குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை

0 82

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோரால் ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண தலைமை அலுவலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.