தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கிருமி நாசினி திரவத்தை குடித்த 14 வயதுச் சிறுமி

0 89

நாரஹேன்பிட்டியில் 14 வயதுச் சிறுமியை கொடூரமாக தாக்கி கழிவறை கிருமிநாசினியை குடித்து விட்டு சாவு என்று கூறி கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமை வார்டன், ஊழியர் ஒருவரின் திட்டுதல் மற்றும் தாக்குதலை தாங்க முடியாத 14 வயதுச் சிறுமி, கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கிருமி நாசினி திரவத்தை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத் சிறுமியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு வழங்கிய தொலைபேசிச் செய்தியின் அடிப்படையில் நாரஹேன்பிட்டி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் சிறுவர் அபிவிருத்தி நிலைய அதிகாரிகள் இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்..

விசாரணையில், கடந்த 6ம் திகதி மதியம், அனாதை இல்லத்தின் தலைமை காப்பாளரும், சமையலறை பணிப்பெண்ணும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாகவும், கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கிருமி நாசினி திரவத்தை சிறுமி குடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வார்டன் மற்றும் சமையலறைப் பணிப்பெண் ஆகியோர் கிருமி நாசினிகள் அடங்கிய பாட்டிலை சிறுமியின் அருகில் வைத்து, “குடி, குடி, செத்து விடு” என்று கூறி மேலும் அடித்துக் கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.