தமிழ் ஓசை
தமிழ் ஓசை

காணாமல் போன தாயும் மகளும் சடலங்களாக மீட்பு😥

0 105

அங்குருவாதொட்ட, உருதுதாவ பிரதேசத்தில் காணாமல் போன இளம் தாய் மற்றும் 11 மாதங்களேயான குழந்தையின் சடலங்கள் அங்குருவாதொட்ட இரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா ஆகியேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.

அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடளித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்   இருவரும்   சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.