தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடற்படை சிப்பாய் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மரணம்

0 95

கடற்படை சிப்பாய் ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, திடீரென சுகயீனமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார்.

வவுனியா பூனேவ கடற்படை முகாமையில் இணைந்துகொண்ட, அனுராதபுரம், திறப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த நிமந்த டில்ஷான் தயாரத்ன என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

புதன்கிழமை (30) அன்று காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்தார். அவரை பூனே கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.