தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

0 131

அவுஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த மர்ம பொருள் சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ரொக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

மேலும், அபாயகரமான பொருளில் இருந்து விலகி இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் அவுஸ்திரேலிய விண்வெளி மையம் தெரிவிக்கையில்,

இந்த மர்ம பொருள் தொடர்பாக தற்போது விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும், இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம். மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். 

அந்த பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.